என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இளம்பெண் தாக்குதல்"
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள திருவல்லம் பாய்ச்சலூர் பகுதியை சேர்ந்தவர் அனீஸ் (வயது 27). இவரது மனைவி ஆதிரா (23).
அனீசுக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் தன்னையும், தனது குழந்தையையும் அனீஸ் தாக்கியதாக திருவல்லா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு போலீசார் கூறியதால் அனீசும், அவரது மனைவி ஆதிராவும் திருவல்லா போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.
திருவல்லா போலீஸ் நிலையத்தில் விசாரணை நடந்த போது அனீசை போலீசார் தாக்கி உள்ளனர். இதனால் பயந்து போன அனீஸ் தனது மனைவியை அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார். உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் விரட்டிச் சென்றனர்.
அவர்கள் பிடியில் ஆதிரா மட்டும் சிக்கிக்கொண்டார். அனீஸ் தப்பித்த ஆத்திரத்தை அவர் மீது காட்டும் விதத்தில் ஆதிராவை 2 போலீஸ்காரர்களும் நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார்கள். ஷு காலாலும் அவரை மிதித்தனர். பிறகு அவரை போலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.
இதுபற்றி விசாரணை நடத்திய பத்தனம்திட்டா போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார், நடுரோட்டில் பெண்ணை தாக்கிய 2 போலீஸ்காரர்களையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஆதிரா தற்போது சிகிச்சைக்காக திருவல்லா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே உள்ள அன்புவிளை குட்டக்குழி பகுதியைச் சேர்ந்தவர் உண்ணி கிருஷ்ணன். இவரது மனைவி ஜினி(வயது29).
அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி தொழிற்சாலையில் ஜினி வேலை செய்து வருகிறார். தினமும் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
நேற்று மாலையும் வழக்கம் போல முந்திரி தொழிற் சாலையில் வேலை முடிந்து ஜினி வீட்டுக்கு நடந்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார்(21) என்ற வாலிபர் அங்கு வந்து அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.
அவரை ஜினி கண்டித்ததால் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் கட்டையால் ஜினியை தாக்கி உள்ளார். இதற்கு அவரது தந்தை கபிரியேல் உடந்தையாக இருந்து உள்ளார். இதில் காயம் அடைந்த ஜினி திருவட்டாரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தன்னை தாக்கியது பற்றி ஜெயக்குமார் மற்றும் கபிரியேல் மீது திருவட்டார் போலீசிலும் புகார் செய்தார்.
இது பற்றி 6 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரது தந்தை கபிரியேலை போலீசார் தேடி வருகிறார்கள்.
நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஷார்மி (வயது 32).
இவர் வெளியில் செல்லும்போது காஞ்சாம்புறம் தேனாம்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜன் (36) என்பவரது ஆட்டோவை பயன்படுத்தி வந்தார். சமீபகாலமாக ராஜனின் ஆட்டோவில் செல்லாமல் வேறு ஒரு ஆட்டோவில் சென்றார்.
இதனால் ராஜன், ஆத்திரத்தில் ஷார்மியுடன் தகராறில் ஈடுபட்டார். நேற்று ஷார்மி பாலாமடம் பகுதியில் சென்றபோது அவரை தடுத்து நிறுத்தி ராஜன் தாக்கினார். இதில் காயம் அடைந்த ஷார்மி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுபற்றி ஷார்மி நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்தனர்.
பேரணாம்பட்டு ஏரிகுத்தி புதுமனை காலனியை சேர்ந்த மோகன் மகன் பாரதி (வயது 28). திருமணம் ஆகாதவர். இவர், அதே பகுதியில் உள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடித்தார். குடம் நிரம்பிய பிறகு சரியாக குழாயை மூடாமல் சென்று சென்றுள்ளார். இதனால் தண்ணீர் வீணாகியுள்ளது.
அப்போது, அங்கு வந்த ராஜூ என்பவரின் மனைவி சுதா, குழாயை சரியாக மூடி விட்டு செல்ல முடியாதா? என்று கேட்டு பாரதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த சுதாவும், அவரது கணவர் ராஜூவும் இளம்பெண் பாரதியை தாக்கினர்.
காயமடைந்த இளம்பெண் சிகிச்சைக்காக பேரணாம் பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து, பேரணாம்பட்டு போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் மணி கண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து ராஜூ (27) மற்றும் அவருடைய மனைவி சுதாவை (24) கைது செய்தனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் மாவட்டம் சங்ககிரி பவானி மெயின் ரோட்டை சேர்ந்தவர் வெங்டேஷ் (வயது 36). இவரது மனைவி ரஞ்சனா செல்லம்(34). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடேசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவர் 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு ஈரோட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று விநாயகர் சதுர்த் தியையொட்டி சங்ககிரியில் உள்ள வீட்டிற்கு வெங்கடேஷ், அவரது தந்தை குணசேகரன் (64) ஆகியோர் உறவினர்களுடன் வந்தனர். அவர்கள் ரஞ்சனாவிடம் குழந்தைகளின் துணிகளை எடுத்து தருமாறு கேட்டனர். அதற்கு, ரஞ்சனா தனது குழந்தைகளை இங்கு அழைத்து வருமாறு கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ரஞ்சனாவை தாக்கியதாக தெரிகிறது.
இது குறித்த புகாரின் பேரில் குணசேகரன் மற்றும் தீபன்(30) ஆகியோரை சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னகாடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கமலா (வயது 32). இவரது தாயார் தவமணி. இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த பெரியசாமி (39) என்பவர் தவமணியிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. மேலும் கமலாவின் அத்தை அமலாவதியிடம் இருந்தும் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த பணத்தில் பெரியசாமி வீட்டில் விசைத்தறி கூடம் அமைத்தார். ஆனால் பணம் வாங்கி 6 வருடங்கள் ஆகியும் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அவரது வீட்டிற்கு சென்று கமலா வாங்கிய கடனை திருப்பி கொடு என பெரியசாமியிடம் கேட்டார். அதற்கு அவர் பணம் கொடுக்க முடியாது என்றார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி சரிமாரியாக கமலாவை அடித்து உதைத்ததுடன் இனிமேல் பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.
காயம் அடைந்த அவர் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூவ் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தார். பின்னர் போலீசார் அவரை ஓமலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்